அண்ணாமலை  puthiya thalaimurai
தமிழ்நாடு

“ஆட்டை பிரியாணி போடுங்கள், அல்லது...” - தொடரும் விமர்சனங்களுக்கு அண்ணாமலை பதில்!

“திமுக, அதிமுக-வினர், ‘கோவையில் ஆட்டு பிரியாணி ரெடி ஆகிட்டிருக்கு’ என பரப்புரை செய்கிறார்களே... அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?” என்ற செய்தியாளர் கேள்விக்கு அண்ணாமலை பதில்...

PT WEB

தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர் ஒருவர், “திமுக, அதிமுக-வினர், ‘கோவையில் ஆட்டு பிரியாணி ரெடி ஆகிட்டிருக்கு’ என பரப்புரை செய்கிறார்களே... அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?” என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “எவ்வளவு பயந்து போய் உள்ளார்கள் அவர்கள் என தெரிகிறது. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ஆட்டுக்குட்டியை தூக்கிக்கொண்டு போகிறாராம்... எவ்வளவு பயந்துவிட்டார்கள் பாருங்கள். கோவையில் உள்ள குரும்பா பிரிவு மக்கள், ஆடு மேய்க்கும் தொழிலை பிரதானமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்டின் தோலினால் செய்யப்பட்ட கம்பளியை ஆசையாக எனக்கு நேற்று போர்த்தினார்கள். இதுதான் ஜனநாயகம்

ஒரு ஜனநாயகத்தின் மரபே, ஒருவர் செய்யும் வேலையை ஏற்று, அதற்கு நாம் அப்படியே அங்கீகாரம் கொடுக்க வேண்டும். டி.ஆர்.பி ராஜாவுக்கு என்றாவது ஒருதுளி வேர்வை சிந்தியதுண்டா? கிராமத்திலோ நகரத்திலோ அவர் உழைத்து சம்பாதித்துள்ளாரா? Born with silver spoon அவர்.

கோவையில் அரசியலின் தன்மை குறைந்துவிட்டது. தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதை அரசியல் என்கின்றனர். என் பதில், ஆட்டை பிரியாணி போடுங்கள்... அல்லது என்னவேணும்னாலும் செய்யுங்கள். ஆனால் ஆட்டை கொடுமை செய்யாமல் இருங்கள். அதுதான் என் அன்பான வேண்டுகோள்.

(முன்னதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியது)

ஜூன் 4-ம் தேதி கோவையில் மக்களின் தீர்ப்பை மட்டும் பாருங்கள். என்னதான் இவர்கள் தலைகீழாக நின்றாலும், கோவை மக்கள் புது சரித்திரத்தை எழுதுவர். கோவை மக்கள் தெளிவாக இருக்கும்போது, டி.ஆர்.பி. ராஜா போன்றோரால் எப்படி மக்கள் முடிவை மாற்ற முடியும்?” என்றார்.