Anitha Radhakrishnan, Tamilisai PT
தமிழ்நாடு

“தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இருக்கிறார்; அவர் பிளான் இதுதான்” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

“தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இருக்கிறார்; அவர் பிளான் இதுதான்” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

PT WEB

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன்,

“ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வது அவரவர் தலையெழுத்து. அது அவர்களுக்கே தெரியும். தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இருக்கிறார். தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் துணை ஜனாதிபதி பதவியை கொடுத்தாலும் கொடுப்பார்கள் என அவர் நினைக்கலாம்.

தமிழக முதலமைச்சர் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் அய்யா வைகுண்டரை வணங்குவதற்கு வந்துள்ளேன். I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறவும், தூத்துக்குடியில் கனிமொழி அவர்களை எதிர்த்து போட்டியிடும் நபர்கள் டெபாசிட் இழக்க வேண்டியும் வேண்டினேன்” என்றார்.

மீன்வர்கள் கைது பிரச்னை குறித்து..

இலங்கையில் தமிழக மீனவர்களை தொடர்ந்து பிடிக்கிறார்கள். இலங்கை அரசு படகுகளை கைப்பற்றுகிறது. தமிழக முதலமைச்சர் அழுத்தமான அழுத்தம் கொடுத்ததும் கைதுசெய்யப்பட்டோர் விடுவிக்கப்படுகிறார்கள். அப்போதும் படகை அவர்கள் விடுவிக்கவில்லை. கச்சத்தீவை மீட்டு தருவதாகவும், படகுகளை மீட்டுத்தருவதாகவும் மத்திய அமைச்சர்கள் பேச்சளவில் பேசி செல்கின்றனர்.

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பிரச்னை பற்றி?

மத்தியில் தனி நிதி கிடையாது, அவர்கள் முதலாளியோ நாங்கள் தொழிலாளியோ இல்லை. இந்திய நாடு எனபது கூட்டமைப்பு. யாரும் அதிகாரத்தோடு கொடுக்க வேண்டியது இல்லை. அப்படி என்றால் எய்ம்ஸ் கட்டி கொடுக்க வைண்டியதுதானே.

வெளிநாட்டில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை பா.ஜ.க அரசு காப்பாற்றியதாக பிரதமர் கூறுகிறார். இதுபற்றி புள்ளி விவரத்தோடு பிரதமர் கூறினால், அவருக்கு பதில் கொடுக்கலாம்.

ஹெலிகாப்டர் தளம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்யவேண்டும். மீனவர்களை பாதுகாக்க கடற்கரை பகுதிகளில் ஆம்புலன்ஸ் அமைக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணம். வரும் பட்ஜெட்டில் முதலமைச்சர் அறிவிப்பார்கள்” என்றார்.