தமிழ்நாடு

அனிதாவுக்கு டாக்டர் பட்டம்!

அனிதாவுக்கு டாக்டர் பட்டம்!

webteam

டாக்டர் அனிதா என்கிற பெயரில் நெட்டிசன்கள் உருவாக்கிய ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

அரியலூர் அருகே குழுமூரைச் சேர்ந்த சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, கட் ஆஃப் 196.5-ஐ தக்க வைத்திருந்தார். அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவ படிப்பு படிக்க ஆசைப்பட்டு அது நிறைவேறாததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு நெட்டிசன்கள் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். டாக்டர் அனிதா என்கிற ஹேஷ்டாக் ட்விட்டரில் சென்னை அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக், “இந்த பொண்ணு மனசுல இருந்த கனவுக்கும், கண்ல இருந்த ஏமாற்றத்துக்கும், எங்க கண்ணீருக்கும் யார் பதில் சொல்லுவா? போங்கடா நீங்களும் உங்க.... மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவு டா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு? எனக்கு அவ டாக்டர் தான்டா. நீங்க குடுக்காத டாக்டர் பட்டத்த நாங்க குடுப்போம் டா அவளுக்கு” எனத் தெரிவித்துள்ளார்.