தமிழ்நாடு

பிரதமரை அவமதித்தவர்கள் தேசவிரோதிகள்.. நிர்மலா சீதாராமன்

பிரதமரை அவமதித்தவர்கள் தேசவிரோதிகள்.. நிர்மலா சீதாராமன்

Rasus

சென்னை மெரினா போராட்டத்தில் தேசியக் கொடியையும், பிரதமரையும் அவமதித்தவர்கள் தேசவிரோதிகள் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது தேசியக் கொடியையும், பிரதமரையும் அவமதித்தவர்கள் தேசவிரோதிகள் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.