விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த ஆடை வடிவமைப்பு கல்வி கற்கும் திருநங்கை அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் அலங்காரத்துடன் மேடையில் ஒய்யார நடை போட்டனர். இந்தப் போட்டியில் சென்னை ஆண்ட்ரியா முதல் பரிசைப் பெற்றுள்ளார். இரண்டாவதாக சேலம் கவியும், மூன்றாவதாக மதுரை வருணிதாவும் தேர்வாகினர். திரைப்படங்களில் திருநங்கை வேடங்களில் திருநங்கைகள் மட்டுமே நடிக்க வேண்டும், திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும், சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக திருநங்கைகள் வலியுறுத்தினர்.