நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல்லை உடைத்து காவல் அதிகாரி பல்வீர் சிங் சித்ரவதை செய்த விவகாரத்தில், அமுதா ஐஏஎஸ் தலைமையில் உயர்மட்டக் குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாட்சியம் அளித்த இளைஞரை காவல் துறையினர் மிரட்டியதாக புதிய புகார் எழுந்துள்ளது. மிரட்டலுக்கு பயந்துபோன இளைஞர் பிறழ் சாட்சியம் அளித்ததாக இளைஞரின் தாத்தா பேட்டியளித்துள்ளார்.
பிறழ் சாட்சியாக மாறிய சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், சூர்யாவின் சார்பில் அவரது தாத்தா பூதப்பாண்டி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரெண்டு பல்லையும் புடுங்கிட்டாங்க உசுரு தப்பிச்சிருச்சு. அவன பொழைக்கவிடாம பண்ணிட்டாங்களேயா. இன்னும் அவன என்னையா செய்ய. அவன நாங்க வச்சு காலத்த ஓட்ட முடியுமா? போலீசு பயங்காட்டி வச்சுருக்கு அவன. இனி காலத்த ஓட்ட முடியாது. நான் சொல்லுறத சொல்லு அப்படீன்று சொல்லி குடுக்க வச்சிருக்காங்க. அதனாலதான் சொல்றான். இல்லாட்டி சொல்லவே மாட்டான் ஒரு காலமும்.
எல்லாம் பாத்தாச்சு இன்னும் என்ன செய்ய முடியும் அவனுகள. 45 ஆயிரமுள்ள கொடுத்திருக்கோம் வெளிய கொன்றாரதுக்கு அவன. போம்பளைக 3 பேரு, எனக்கு தெருஞ்ச போலீஸ்காரக 2 பேரு ஏங்க குடும்பத்துல உள்ளவங்ககிட்ட எங்கேயும் போகக் கூடாது எதையும் சொல்லக் கூடாதுன்னு சொல்றாங்க. இனி என்ன கொல்லட்டும் உண்மைய சொல்லச் செய்வேன். அவனே ஏங்கிட்ட சொல்லிட்டானே வாழ முடியாது அப்படீன்னு. இன்னும் என்னையா பண்ணப்போறான். அவன் ஏன் பயப்படணும் அதுக்கு. நம்மலே செத்துப்போறோம். இன்னும் என்ன அவசியம் இருக்கு” என்று தனது ஆதங்கதை வெளிப்படுத்தினார்.