தமிழ்நாடு

சசிகலாவுக்கு பாதுகாப்புகோரி பெரியகுளம் அம்மா பேரவை நிர்வாகி டிஜிபியிடம் மனு

சசிகலாவுக்கு பாதுகாப்புகோரி பெரியகுளம் அம்மா பேரவை நிர்வாகி டிஜிபியிடம் மனு

Sinekadhara

தமிழகம் வரும் சசிகலாவுக்கு போலீஸ் பாதுகாப்புகோரி பெரியகுளம் அம்மா பேரவை நிர்வாகி டிஜிபியிடம் மனு அனுப்பியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சசிகலாவுக்கு கடந்த 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்ததால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சைமுடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரெசார்ட்டுக்கு சென்றபோது சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோரும், அமமுக சார்பில் சசிகலா கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் சசிகலா கொடியேற்றுவதற்காக கம்பம் நட, பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

இதனால், பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வரவுள்ள சசிகலாவுக்கு பாதுகாப்பு தரக்கோரி, பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மாபேரவை தலைவர் வைகை சாந்தகுமார் தபால் மூலம் டிஜிபிக்கு மனு அனுப்பி இருக்கிறார்.