தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் திலீப் விவகாரம் : ‘அம்மா’அவசரக் கூட்டம்

webteam

திலீப் தொடர்பான விவகாரம் தொடர்பாக நிர்வாகிகள் அவசர கூட்டம் நடத்த கேரள நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திலீப் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் கேரள நடிகர் சங்கத்தில் சர்ச்சையாக வெடித்தது. இதைத்தொடர்ந்து கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து திலீப் நீக்கப்பட்டார். அண்மையில் ‘அம்மா’வின் புதிய தலைவராக மோகன்லால் பதிவியேற்றார். இதையடுத்து திலீப் மீண்டும் ‘அம்மா’வில் சேர்க்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்ட நடிகை ‘அம்மா’வில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக ரம்யா, ரீமா மற்றும் கீது ஆகியோரும் ‘அம்மா’வில் இருந்து விலகினர்.
 
இதன் எதிரொலியாக தன் மீதான குற்றச்சாட்டு போலியானது என நிரூபிக்கும் வரை, தான் ‘அம்மா’வில் இருந்து விலகி இருப்பதாக திலீப் தெரிவித்தார். ஆனாலும் இந்தப் பிரச்னை தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே இருந்தது. பல நடிகர், நடிகைகளும் ‘அம்மா’வில் இருந்து விலகியவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்தச் சூழலில் திலீப்பை ஏன் மீண்டும் சேர்த்தேன் என மோகன்லால் அறிக்கை வெளியிட்டார். அதில் ‘அம்மா’ அனைத்து மலையாள நடிகர், நடிகைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ‘அம்மா’வில் உள்ள 485 உறுப்பினர்களில் 137 நடிகைகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வசதியின்றி, உடல்நலம் பாதித்துள்ளனர். அவர்களுக்கு ‘அம்மா’ உதவி செய்து வருகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலரின் தூண்டுதலால் திலீப் விவகாரம் சர்ச்சையானது. பெரும்பான்மை உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றே அவரை மீண்டும் அம்மாவில் சேர்த்தோம் என விளக்களிப்பட்டிருந்தது. இதற்கிடையே ‘அம்மா’வில் இருந்து விலகிச் சென்றவர்களுக்கு ஆதரவாக ரேவதி, பார்வதி மற்றும் பத்மபிரியா ஆகியோர் குரல் கொடுத்தனர். அத்துடன் திலீப் மீது நடவடிக்கை எடுக்க ‘அம்மா’ அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். அந்தக் கோரிக்கை ஏற்று ‘அம்மா’ அவசரக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. ஆனால் எப்போது கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்படவில்லை.