தமிழ்நாடு

அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்: ஓபிஎஸ்

அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்: ஓபிஎஸ்

Sinekadhara

அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார். 

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில், எல்.ஐ,சி மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுகொள்ளும் என்று நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, குடும்ப தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ. 2லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ. 4 லட்சமும், நிரந்தர இயலாமைக்கு ரூ. 2 லட்சமும் காப்பீடு வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.