தமிழ்நாடு

தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

webteam

தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

பேரவையில் பேசிய கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி 1949 ஆம் ஆண்டு‌ இயற்றப்பட்ட தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். இந்தச் சட்டத்தால் கன்னியாகுமரியில் உள்ள 60 சதவிகித விவசாயிகள் நிலங்களை வாங்கவோ, விற்கவோ முடியாமல் அவதிப்பட்டு வருவதாக உறுப்பினர் பிரின்ஸ் பேசினார். 

இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவசன், முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரம் ஏற்கெனவே எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சாதக, பாதகங்களை அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், யானைகள் வேளாண் நிலங்களுக்குள் புகுவதை தடுக்க அகழிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.