தமிழ்நாடு

மது விற்பனையை மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் அனுமதிக்க வலியுறுத்தல்

மது விற்பனையை மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் அனுமதிக்க வலியுறுத்தல்

webteam

மது விற்பனையை மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 

இதன் மூலம் கறுப்புப் பணம் உருவாவது பெருமளவில் தவிர்க்கப்படும் என நிதியமைச்சர் ஜெட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு இந்தியாவில் மது பானங்கள் விற்பனையானதாகவும் இது ஆண்டுக்கு ஆண்டு 30% என்ற அளவில் அதிகரிப்பதாகவும் அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கருப்பு பணமே தவறான செயல்களுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அகில இந்திய வணிகர் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.