தமிழ்நாடு

“தேர்தல் அறிவித்ததில் எங்கள் தவறு எதுவுமில்லை” - தேர்தல் அதிகாரி அசோக் லவாசா

rajakannan

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்ததில் தங்கள் தவறு எதுவும் இல்லை என்று தேர்தல் அதிகாரி அசோக் லவாசா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “ஒரே ஒரு தொகுதி என்பதால் திருவாரூர் இடைத்தேர்தலை நடத்த நிர்வாகம் தயாராக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அதனால்தான் தேர்தலை அறிவித்தோம். ஆனால், அரசியல் கட்சிகள் கூட தேர்தலுக்கு தயாராக இல்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. மக்களும் தேர்தலுக்கு தயாராக இல்லை. 

இது தேர்தல் ஆணையத்தில் தவறு அல்ல. தேர்தலை அறிவிப்பதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை செய்தோம். தேர்தலுக்கு மக்கள் தயாராக இல்லை என்று தெரிந்த உடன் ரத்து செய்துவிட்டோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உட்பட அனைத்திற்கும் 180 நாட்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்தார். 

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது.