அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முறையாக அனுமதி பெற்று மாடுபிடி வீரராக போலீஸ் காவலர் ஒருவர் பங்கேற்றுள்ளார்.
மதுரை மாநகர் புதூர் சட்டம் ஒழுங்கு காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றும் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 5-வது சுற்றில் 31-வது வீரராக களம் கண்டுள்ளார்.
காவல்துறை பணிக்கு இடையே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பதற்காக தொடர்ந்து 23 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து வரும் இவர், மாடுபிடி வீரராக, பல்வேறு பரிசுகளை பெற்று ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக முறையாக தகவல் தெரிவித்து விடுப்பு பெற்று, போட்டியில் வினோத் பங்கேற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.