தமிழ்நாடு

ஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை !

ஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை !

webteam

ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் டெல்லி சென்ற விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை விமானநிலையத்தில் இருந்து டெல்லிக்கு 130 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் காலை 6.47 மணிக்கு புறப்பட்டது.  சிறிது நேரத்தில் எஞ்சின் பகுதியில் ஏதோ அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டும் என்றார். இதனையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதில் பயணிகளுக்கு எதும் பாதிப்பு ஏற்படவில்லை. 

இதுதொடர்பாக பேசிய விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் எஞ்சின் பகுதியில் பறவையின் சிறகுகள் இருந்தது. மேலும் சில டர்பின் பிளேடுகள் சேதமடைந்திருந்தது. விமானத்தின் மீது எந்தப்பறவை மோதியது என தெரியவில்லை. இந்தச் சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சுமார் 6000அடி உயரத்தில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது நடைப்பெற்றுள்ளது. எஞ்சின் பகுதியில் இறந்த பறவையை காணவில்லை. விமானத்தில் மோதி கீழே விழுந்து இருக்கலாம் என்றனர். விமானி துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.