மெக்கானிக்கல் மாணவர்கள் 4 பேர் இணைந்து காற்றின் மூலமாக இயங்கக்கூடிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மெக்கானிக்கல் மாணவரகள் 4 பேர் இணைந்து காற்றின் மூலமாக இயங்கக்கூடிய காரை வடிவமைத்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் பயோ கேஸ் மூலமாக செல்லும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் மாசு ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாக கிடைக்கும் காற்றை சிலிண்டரில் நிரப்பி, அந்த சிலிண்டர் மூலமாக வெளிவரும் காற்றை, வாகனம் இயங்கக்கூடிய வகையில் அதற்கு தேவையான கருவிகளை கொண்டு மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த வாகனம் நான்குபேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் செலவில் செய்துள்ளதாகவும், காற்றின் மூலம் இயங்குவதால் ஒரு மணிக்கு 60 கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லக்கூடியதாகவும், இந்த வகையான வாகனங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் வகையில் மாணவர்கள் படைத்துள்ளார்கள். இது கல்லூரி பேராசிரியர்களிடமும், மாணவர்களிடமும், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.