தமிழ்நாடு

"சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும்" - ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பேட்டி

"சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும்" - ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பேட்டி

kaleelrahman

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் தன்னை நீக்குவதற்கு ஒபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் ஓபிஎஸ் சகோதரர் ஒ.ராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று திருச்செந்தூரில் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைவது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று அதிமுகவிலிருந்து ஒ.ராஜா உள்ளிட்ட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து பெரியகுளத்திற்கு திரும்பிய ஓ.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “அதிமுகவின் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் முழுமையாக தோல்வி அதற்கு காரணம் ஓபிஎஸ், இபிஎஸ் அவர்கள் தலைமையிலான வழிநடத்தலே காரணம்.

அதிமுகவை சசிகலா தலைமையேற்று கட்சியை வழி நடத்தினால் மட்டுமே மீண்டும் கட்சி வலிமை பெறும். வரும் தேர்தல்களில் வெற்றி அடையும். என்னை நீக்குவதற்கு இவர்கள் இருவருக்கும் அதிகாரம் இல்லை. நான் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவின் அடிப்படை தொண்டனாக இருந்து வரும் நிலையில், இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

அதிமுகவை வழிநடத்த சசிகலா தலைமை ஏற்க வேண்டும். அதற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன் என்று எனது ஆதரவை சசிகலாவை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் கட்சியில் நடந்த நிகழ்வுகளை விளக்கிக் கூறி கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை ஆதரவாளர்களுடன் சென்று தெரிவித்தேன். தான் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தானாக சென்று சசிகலாவை சந்தித்தேன்” எனத் தெரிவித்தார்.