admk office pt desk
தமிழ்நாடு

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது

சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

webteam

அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு பின் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

eps

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை தீர்மானிப்பதில் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவது, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு அரசைக் கண்டிப்பது, பாதிப்புகளுக்கான காரணம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவது, பல ஆண்டுகளாக தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீனவர்கள் பிரச்னை, காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்கள், சட்டம் ஒழுங்கு, வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் உள்ளிட்டவைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பே கிடையாது என்று கூறினார்.