தமிழ்நாடு

''தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிமுக கோரிக்கை'' - பொள்ளாச்சி ஜெயராமன்

''தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிமுக கோரிக்கை'' - பொள்ளாச்சி ஜெயராமன்

webteam

தேர்தலை முன் கூட்டியே நடத்த இந்திய தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு
செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளனர்.

முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு திமுக கோரிக்கை விடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆலோசனைக்கு பிறகு அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஏப்ரல் மாதத்தின் 3வது அல்லது 4வது வாரத்தில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் அதிமுக அரசு கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேர்தலுக்காக ரூ.2,500 வழங்கப்படவில்லை. மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பரிசு தொகுப்பாக தரப்படுகிறது” எனத் தெரிவித்தார்.