சென்னை வானகரத்தில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதனையொட்டி சென்னை வானகரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. ஓபிஎஸ் ஆதரவாளர்கள்தான் பேனரை கிழித்ததாக இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
முன்னதாக நாளை நடைபெறவுள்ள பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசப்படலாம் என்பதால் அதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேசமயம் இபிஎஸ் ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். ஆதரவாளர்கள் இருதரப்புக்கும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், ஸ்ரீவாரு மண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தற்போது பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது... எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில், தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்த கொடுத்தார். பேனர்களை கிழித்து எறிவதன் மூலம் ஆதாயம் தேட விரும்பினால் அது நடக்காது என தெரிவித்தார். உடுமலை