நீட் வழக்கில் ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி ஆஜராகி வாதாடினார் என்ற அதிமுக உறுப்பினரின் கருத்தை நீக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.
நீட் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி "யார் ஆட்சியில் எப்போது வந்தது ? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? பதில் சொல்லுங்கள்" என கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை "நீட் தேர்வு அவசியம் இல்லை..அதற்கு அவசர தீர்மானம் ஏற்ற வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். இது காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் கொண்டு வரப்பட்டது"
மேலும் "மறு ஆய்வு மனுவை காங்கிரஸ் அரசு தான் தாக்கல் செய்தது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி ஆஜராகி வாதாடினார். அதனால் தான் நிலைமை மோசமடைந்தது.
வரலாற்றை திணிக்காதீர்கள்..மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்" என்றார் இன்பதுரை. இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்பதுறை மற்றும் அதிமுகவினரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூச்சலிட்டனர். இதனையடுத்து காங்கிஸ் எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.