அன்பில் மகேஸ் பொய்யாமொழி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளுக்கு அன்பில் மகேஸ் சொன்ன குட் நியூஸ்!

வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு படிப்பை கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

PT WEB

வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு படிப்பை கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,”இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஹைடெக் லேப்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்.” எனத் தெரிவித்தார்.