கத்தரி வெயில்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று முதல் தொடங்குகிறது கத்தரி வெயில்! இயல்பைவிட 2 - 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது.

PT WEB

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸும், வட உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெயிலில் சற்று ஆறுதலாக மே 7 ஆம் தேதிக்குப்பிறகு உள்பகுதிகளில் கோடை மழை பெய்யக்கூடும் என்றும், ஆனால், சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் தமிழ்நாட்டில் கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. வருகிற 28ஆம் தேதி வரை அதாவது 25 நாட்கள் கத்தரி வெயில் சுட்டெரிக்கும் என்று கூறப்படுகிறது.