தமிழ்நாடு

அகரம் அகழாய்வு பணி: 8 அடி ஆழத்தில் புதிதாக கண்டறியப்பட்ட உறைகிணறு

அகரம் அகழாய்வு பணி: 8 அடி ஆழத்தில் புதிதாக கண்டறியப்பட்ட உறைகிணறு

kaleelrahman

அகரம் அகழாய்வு பணியின்போது மேலும் புதிதாக ஒரு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அகழாய்வு பணியில் இதற்கு முன்பு அகரத்தில் 15 சுடுமண் உறைகளுடன் கூடிய உறைகிணறும், 8அடி நீளமுள்ள உறைகிணறும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவதாக உறைகிணறு கண்டறியப்பட்டது ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.