சென்னையில் அதிகாலை முதல் மாலை வரை மழை பெய்த நிலையில், இன்று காலை லேசாக அடித்தது. இந்நிலையில் மீண்டும் இன்று கனமழை ஆரம்பித்துள்ளது.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், ஏர்போர்ட், பல்லாவரம், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, கொளப்பாக்கம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், திருமுல்லை வாயல், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் சில இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இட மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி, நாகை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.