தமிழ்நாடு

உடுமலை கவுசல்யாவுக்கு மீண்டும் பணி

உடுமலை கவுசல்யாவுக்கு மீண்டும் பணி

Rasus

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி, பணியிடை நீக்‌கம் செய்யப்பட்ட உடுமலை கவுசல்யாவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டதாக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெ‌ன்ட‌ நிறுவனம் தெரிவித்துள்‌ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த கவுசல்யாவின் கணவர் சங்கர், 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது படுகாயமடைந்து, மீண்டு ‌வந்த கவுசல்யாவுக்கு, மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் நிறுவனத்தில் தற்காலிக பணி வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றி‌ல் இந்திய இறையாண்மைக்கு எ‌திராக கவுசல்யா பேசியதாக கூறி அவரை வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்நிலையில், கவுசல்யா மன்னிப்பு கடிதம் வழங்கியிருப்பதால், அதை ஏற்று அவருக்கு மீண்டும் பணி வழங்கியிருப்பதாக கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா தெரிவித்துள்ளார்.