தமிழ்நாடு

திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலை‌க்கு புவிசார் குறியீடு 

திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலை‌க்கு புவிசார் குறியீடு 

webteam

புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு மற்றும் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள புவிசார் குறியீடுகளின் எண்ணிக்கை தற்போது 31ஆக உயர்ந்துள்ளது. 

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளையும் பொருளுக்கோ மத்திய அரசு,  புவிசார் குறியீடு வழங்குகிறது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகவும் இது பார்க்கப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் கூட்டுறவு சங்கம் விண்ணப்பித்த நிலையில், தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. திண்டுக்கல் பூட்டின் தயாரிப்பானது சங்கரலிங்காச்சாரி என்பவரால் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதே போன்று, செட்டிநாட்டவர் கைவண்ணத்தில் உருவான கலாச்சார மிகுந்த கண்டாங்கி சேலை‌க்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 

கடந்த 2013ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் விண்ணப்பித்த நிலையில், கண்டாங்கி சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. முன்னதாக மதுரை மல்லிப்பூ, சுங்குடிச் சேலை, சேலம் மாம்பழம், பத்தமடை பாய் உள்ளிட்ட 29 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.