தமிழ்நாடு

''புதிதாக புயல் உருவாக வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம்

webteam

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

வங்கக் கடலில் கடந்த 21ம் தேதி உருவான நிவர் புயலானது நேற்று கரையைக் கடந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், ''புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. அதற்கான சூழலை கண்காணித்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தற்போதைய நிலவரப்படி தென் தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்