சென்னையில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பின்னர் பொறுப்பாளர்களுடம் ஆலோசனை நடக்கும் என கூறப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி ’’எடப்பாடியாரை மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசிவருகிறார். எடப்பாடியாரை தவறாக பேசினால் உங்கள் நாக்கு அழுகிவிடும். அண்ணன் எடப்பாடியார் தீரன் சின்னமலை, அண்ணன் ஓ.பி.எஸ் பூலித்தேவன். ஓபிஎஸ்-இபிஎஸ் மருது சகோதரர்கள் போலவும், ராமன் லெட்சுமணன் போலவும் செயல்படுகின்றனர்’’ என்றார்