தமிழ்நாடு

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது" - முதல்வர் ஸ்டாலின்

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது" - முதல்வர் ஸ்டாலின்

PT WEB

தமிழக சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெறுகிறது. விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக நேரமில்லா நேரத்தில் பேசவேண்டும் என்று கூறி எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். அனுமதி வழங்கபட்டதையடுத்து, கோடநாடு விவகாரத்தில், தமிழக அரசு பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருவதாக தெரிவித்தார். அதையடுத்து அவருக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டிக்கும் விதமாக, அதிமுக உறுப்பினர்கள் அவை வாயில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து அவைக்காவலர்கள் கூறியதையடுத்து அங்கிருந்து அதிமுக வெளியேறினர். இதனால் பாஜகவினரும் பாமகவினரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

அப்போது அவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'கோடநாடு விவாரத்தை பொறுத்தவரை கடந்த காலங்களிலும் வழக்குகள் பதிவு செய்யபட்டது. தற்போது புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யவில்லை.  கடந்த ஆட்சியில் வழக்கு பதிவு செய்யபட்டது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் இல்லை; அச்சப்பட தேவையில்லை தெரிவித்தார்.