அரசுக் கல்லூரி முகநூல்
தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளுக்கு இன்றுமுதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” கல்லூரி கல்வி இயக்ககம்

“12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்” என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

PT WEB

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பிக்க முடியாதவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது கல்வி இயக்ககம்.

உயர்க்கல்வித்துறை

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் 2 ரூபாயை தவிர வேறு கட்டணமில்லை. மற்ற பிரிவினருக்கு, பதிவுக்கட்டணம் 2 ரூபாயும், விண்ணப்பக் கட்டணம் 48 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெபிட் கார்டு, கிரெட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ ஆகியவற்றின் மூலம் கட்டணம் செலுத்தலாம். அவ்வாறு முடியாதவர்கள்,

The Director,

Directorate of Collegiate Education,

Chennai-15

என்ற பெயரில், வரைவோலை கொடுக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் கூறியுள்ளது.