தமிழ்நாடு

தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு 

தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு 

webteam

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி தொடங்கியது. 16 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்தும் மானிய கோரிக்கைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. மேலும் முதலமைச்சர் 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார். 

எதிர்கட்சியை பொறுத்தவரை பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டுவந்தது. அதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு விளக்கங்களும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை முடிவடைந்துள்ளது. தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் சட்டமன்றக் கூட்டத்தில் 129 பேர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ளதாகவும் இதில் திமுக எம்.எல்.ஏ மஸ்தான் அதிக கேள்விகளை எழுப்பியதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். மொத்தமாக 124 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நினைவாற்றலுடன் அவ்வபோது முதல்வர் பதில் அளித்தார் எனவும் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களில் 94 பேர் அனைத்து நாள்களும் அவைக்கு வந்துள்ளதாகவும் சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.