அரிய வகை மீன் PT
தமிழ்நாடு

தஞ்சை: ‘அரியவகை கூரை கத்தாழை’- ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம்.. அப்படி என்ன மருத்துவ சிறப்பு இந்த மீனில்?

PT WEB

அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன 25 கிலோ எடை கொண்ட மீன்- மீனவர்கள் மத்தியில் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி. இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இரவு முழுதும் மீன்பிடித்து விட்டு இன்று காலை கரைக்கு திரும்பினார்.

இந்த நிலையில் அவரது வலையில் கூரை கத்தாழை எனப்படும் அரிய வகை மீன் ஒன்று அகப்பட்டிருந்தது. இந்த மீன் 25 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்தக் கூரைக் கத்தாழை மீனின் சிறப்பம்சம் இதில் உள்ள நெட்டி மருத்துவ குணம் கொண்டதாகவும் ஆண்மை குறைவு உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தக் கூடியதாகவும் அத்தோடு விலை உயர்ந்த ஒயின் தயாரிக்க இதனை பயன்படுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் அதிராம்பட்டினம் பெரிய மார்க்கெட்டுக்கு அந்த மீனை கொண்டு சென்று அங்கு அவரது மீன் ஏலம் விடப்பட்டது. அந்த வகையில் அங்கு இருந்த வியாபாரிகள் அந்த மீனை போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுக்கத் துவங்கிய நிலையில் இறுதியில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போனது.

இதனால் மீனவர் ரவி மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் அதிராம்பட்டினம் பெரிய மார்க்கெட்டுக்கு வந்த மீன் ஒன்று ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன செய்தி அப்பகுதியில் உள்ள மற்ற மீனவர்களுக்கு தெரியவர இது பேசும் பொருளாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.