ஆடிப்பெருக்கையொட்டி மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1200-க்கு விற்பனையாகி வருகிறது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்களது குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் நாளை நடைபெறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தொடர் கனமழை காரணமாக பூக்களின் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய் விலை அதிகரித்து 1200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது, பிச்சி பூ 700 ரூபாய்க்கும், முல்லை பூ 700 ரூபாய்க்கும், சம்மங்கி பூ 300 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாய்க்கும், சென்டு மல்லி 80 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
நாளை ஆடிப்பெருகை முன்னிட்டு பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.