தமிழ்நாடு

பட்டப்படிப்பை முடித்த கைதிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு

பட்டப்படிப்பை முடித்த கைதிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு

webteam

திருச்சி மத்திய சிறையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த 68 கைதிகளுக்கு கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு சான்றிதழ்களை வழங்கினார். 

தமிழகத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் திருந்தி தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும், தன்னிம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்க்கொள்ளவும் அவர்கள் பாதியில் விட்ட படிப்பை தொடர வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதேபோல திருச்சி மத்திய சிறையில் உள்ள 68 கைதிகள் தாங்கள் பாதியில் விட்ட படிப்பை முடித்ததை தொடர்ந்து, அவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ்களை கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார். பின்னர் அவர் சிறைச்சாலையை ஆய்வு செய்து கைதிகளின் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள 126 சிறைச்சாலைகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் 8ம் வகுப்பில் இருந்து பட்டயப்படிப்பு வரை பயின்று வருவதாக தெரிவித்தார். இவர்களுக்கு கற்பிக்க 9 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறைகளில் செல்போன் பயன்பாடு முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.