தமிழ்நாடு

தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு - எவ்வளவு தெரியுமா?

தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு - எவ்வளவு தெரியுமா?

ஜா. ஜாக்சன் சிங்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து கூடுதல் மத்திய நிதியுதவி வழங்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டிற்கு ரூ. 352.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ.17. 86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடமிருந்து நிதியுதவி கோரி மனுக்கள் வரும் வரை காத்திருக்காமல், பாதிப்பு ஏற்பட்டவுடன் மத்திய அரசே, பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனடியாக அனுப்பி சேதவிவரங்களை மதிப்பீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.