மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நேரத்தில் விஜயகாந்த் குறித்து நடிகை நமிதா நம்மிடையே பேசினார். அவர் பேசிய பொழுது, "ஒரு முறை ஷூட்டிங் போதுதான் கவனித்தேன். விஜயகாந்த் சார், ஷூட்டிங் நேரத்தில் Stool-மீதுதான் அமர்வார், Chair மீது அமரமாட்டார். அப்போதே அவரிடம் இது குறித்து கேட்டேன். அதற்கு அவர் சொன்னது, ‘Chair மீது உட்கார்ந்தா சோம்பேரித்தனம் வரும்; அதனால எப்பவும் வேலை நேரத்தில் தரையில் உட்கார்ந்து எழணும்’ என்பது. அவரிடம் இருந்து நானும் அதை கற்றேன். இப்படி பல விஷயத்தை எனக்கு சொல்லிதந்தார் அவர்” என்றார்