நடிகர் சூர்யா ட்விட்டர்
தமிழ்நாடு

“பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது” – நடிகர் சூர்யா பேச்சு

பள்ளி மேலாண்மைக் குழு திட்டத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...

webteam

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, சிவக்குமார் கல்வி அறக்கட்டளை பரிசளித்து ஊக்கப்படுத்தப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த அறக்கட்டளையின் 45- வது ஆண்டு விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது.

நடிகர்கள் சூர்யா, சிவகுமார், கார்த்தி

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி என மொத்தம் 26 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ஊக்கதொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதே நமக்கு தெரியாமல் போவதால், பள்ளி, கல்வி தொடர்பான கருத்துக்களை யூடியூபில் வெளியிட்டு அதனை பிரபலமாக்கவும்” எனக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும் கல்வி ஒரு ஆயுதமாக உள்ள நிலையில், அதனை உணர்ந்து அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

நடிகர்கள் சூர்யா, சிவகுமார், கார்த்தி

இந்த நிகழ்ச்சியில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வரும் திண்டிவனம் தாய் தமிழ் பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.