தமிழ்நாடு

தென் இந்தியர்களை இழிவுப்படுத்தினாரா தாக்ரே ? நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

தென் இந்தியர்களை இழிவுப்படுத்தினாரா தாக்ரே ? நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

webteam

சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

தனது வாழ்க்கையை கார்ட்டூனிஸ்டாக தொடங்கிய பால் தாக்கரே, 1966 ஆம் ஆண்டு சிவசேனா என்ற அமைப்பை தொடங்கினார். ஆரம்பத்தில் அமைப்பாகவே செயல்பட்டு வந்த சிவசேனா பின்னர் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில் இயக்குநர் அபிஜித் இயக்கத்தில் பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடிகர் தேசிய விருது பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பால் தாக்கரேவாக நடித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. மும்பையில் நடைபெற்ற இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே மற்றும் திரை நட்சத்திரங்கள், பால் தாக்கரேவின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் பால்தாக்ரேவின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.  பால்தாக்ரே திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த் “இது, தென் மாநில மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பேசும் வகையில் இப்படத்தில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதுபோன்று வெறுப்புணர்வை பரப்புவதைத் தடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொணடுள்ளார்.