சென்னை ராமாபுரம் பகுதியில் பெருநகர காவல் துறை சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதுகுறித்து அவர், “கடந்த 4 மாதமாக நான்தான் உலகத்திலேயே சூப்பர் ஸ்டாராக இருந்தேன் என உங்களுக்குத் தெரியும். தெரியாமல் கிளி ஒன்றை வளர்த்துவிட்டேன். கிளியை வளர்த்தால் அது நம் பெயரைச் சொல்லும் என நினைத்தேன். அது நம்மிடம் விளையாடும் என நினைத்து வளர்த்தேன். அது, என்ன கிளி என்று எனக்குத் தெரியாது. அதனால் நான் அடைந்த வேதனை கொஞ்சநஞ்சமல்ல. பிறகு அதிலிருந்து வெளியே வந்தேன். இடையிலே சினிமாவுக்காக உடலைக் குறைத்தேன். இதற்கிடையில் நான் உடல்நலத்தால் பாதிக்கப்பட்டேன். இதனால் 5 மாதம் படுத்தபடுக்கையாக சாவின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதற்குக் காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்கம். அவற்றுக்கு நான் அடிமையாயிட்டேன். இதனால் நான் உங்களுக்கு உதாரணமாக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசிய உருக்கமான கருத்துக்களை முழுவதும் கேட்க, இந்த வீடியோவில் பார்க்கவும்.