நடிகர் ஜீவா புதியதலைமுறை
தமிழ்நாடு

’இந்த நேரத்தில் ஏன் இப்படி பண்றீங்க’ | விபத்தில் சிக்கிய ஜீவா கார் - சின்னசேலம் அருகே நடந்த சம்பவம்!

PT WEB

சென்னையில் இருந்து சேலம் நோக்கி நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் தனி காரில் சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாலையை கடக்கும் முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது நடிகர் ஜீவாவின் கார் மோதாமல் இருக்க முயன்ற போது சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தின் போது அப்பகுதியில் செல்ஃபி கேட்ட நபரை கண்டித்த நடிகர் ஜீவா...

இந்த விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் அருகில் உள்ள தனியார் மெடிக்கலில் இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

பின்னர், மாற்று கார் மூலமாக சேலத்திற்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்தின் போது அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் நடிகர் ஜீவாவிடம் செல்ஃபி கேட்ட நிலையில் அவரை நடிகர் ஜீவா கண்டித்துள்ளார். தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விபத்தில் சிக்கிய காரை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.