தமிழ்நாடு

லட்ச ரூபாய் மதிப்பில் துப்புறவு பணியாளர்களுக்கு இலவச அரிசி, கையுறைகள் வழங்கிய சமூக ஆர்வலர்

லட்ச ரூபாய் மதிப்பில் துப்புறவு பணியாளர்களுக்கு இலவச அரிசி, கையுறைகள் வழங்கிய சமூக ஆர்வலர்

நிவேதா ஜெகராஜா

பெரம்பலூரில் சமூக ஆர்வலர் ஒருவர் 1 லட்ச ரூபாய் மதிப்பில் 200 துப்புறவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் கையுறைகளை இன்று இலவசமாக வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பலரும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், பல இடங்களில் முன்கள பணியாளர்கள் பலருக்கும் போதுமான அளவு உணவு பாதுகாப்பு கவசங்கள் போன்றவை கிடைப்பதில்லை. அவை கிடைத்தாலும்கூட, ஒருசிலருக்கு குடும்பங்களில் பொருளாதார சிக்கல் இருக்கிறது.

இவற்றையெல்லாம் சரிசெய்ய, அரசோடு இணைந்து தன்னார்வலர்களும் பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில், பெரம்பலூர் நகராட்சியில் 200 துப்புறவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கொரோனா காலங்களில் முன்களப்பணியாளர்களான இவர்கள் ஊரடங்கால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான ராம்குமார் என்பவர் 1 லட்ச ரூபாய் மதிப்பில் 200 நபர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் கையுறைகளை இலவசமாக வழங்கினார். மேலும் அவர் பாதுகாப்பாக பணிபுரியுமாறு கேட்டுக்கொண்ட அவர், வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், 'பேரிடர் காலத்தில் பணம் வைத்திருப்பவர்கள் மனமுவந்து துப்புறவு பணியாளர்களுக்கு உதவுவது சமூக கடமை' எனத் தெரிவித்தார்.