ஆளுநர் குறிப்பிட்டதை போல துணைவேந்தர்கள் பணம் கொடுத்து பதவி பெற்றிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்கு மார் தெரிவித்தார்.
’தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பணம் புரண்டுள்ளது. பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங் கப்பட்டது. இதை என்னால் நம்ப முடியவில்லை’ என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியிருந்தார். இது பற்றி செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:
ஆளுநர் குறிப்பிட்டதை போல துணைவேந்தர்கள் பணம் கொடுத்து பதவி பெற்றிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யாரை யும் குறிப்பிட்டு சொல்லலை. யாரென்று சொன்னால், அதில் உண்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
டிடிவி தினகரன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக கூறியிருக்கிறார். அதற்கு துணை முதலமைச்சர் விளக்கம் அளித்து விட்டார். அதற்கு பிறகு அதுபற்றி நான் பேசுவது சரியாக இருக்காது.
சசிகலா, தினகரன், அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இயக்கத்தையும் அரசையும் வழிநடத்த வேண்டும் என்பது தான் தமிழக மக்களின், கழகத்தொண்டர்களின் ஒட்டுமொத்த உணர்வு. அதுதான் நேற்றும் இன்றும் நாளையும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தினகரனோ, சசிகலாவோ, அவர் குடும்பத்தினரையோ கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பே இல்லை. ’ஈபிஎஸ்- ஓபிஎஸ் உடன் இணைவது தற்கொலை சமம்’ என்று அவர் கூறியிருக்கிறார். அவரை நாங்கள் யாரும் அழைக்கவில்லை. கிழக்கே உதித்த சூரியம் மேற்கே உதித்தாலும் அது நடக்காது. அவராகவே வடிவேலு காமெடி மாதிரி எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறு கூறினார்.