தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட நடவடிக்கை: அண்ணாமலை

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட நடவடிக்கை: அண்ணாமலை

kaleelrahman

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்ச் சூட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.