காவல் ஆய்வாளர் சந்திரமோகன் pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | ”மாட்ட காணோம்” விசாரணையை வீடியோ எடுத்தவர்களை தாக்கிய காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!

திண்டுக்கல் அருகே மாடு காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்கு வந்த தந்தை, மகனை தாக்கிய விவகாரத்தில் ஓட்டுநர் (காவலர்) ரஹமானை தற்காலிக பணிநீக்கமும், காவல் ஆய்வாளர் சந்திரமோகனை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் அருகே உள்ள ம.மு.கோவிலூரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் என்பவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் மாடுகளை வைத்து பால் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு 05.11.23 அன்று தனது பசுமாட்டை காணவில்லை என திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனு அளித்து 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பசுமாடு கிடைக்கவில்லை.

Press news

இதனிடையே கடந்த 05.09.2024 அன்று மாலை தனது மகன் முகமது நசீர் மற்றும் உறவினர்களுடன் தாலுகா காவல் நிலையம் சென்று ஆய்வாளர் சந்திர மோகனிடம் எப்படியாவது பசு மாட்டை கண்டுபிடித்துத் தர வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது தனக்கு ஆதாரம் வேணும் என்பதற்காக ஆய்வாளர் சந்திரமோனுக்கு தெரியாமல் மகன் நசீர் மற்றும் உடன் வந்த நண்பர் ஒருவரின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இதைப் பார்த்த காவல் ஆய்வாளர் சந்திரமோகன் நசீரின் செல்போனை பிடுங்க முற்பட்டுள்ளார்.

இதைப் பார்த்த காவலர்கள், முகமது நஸ்ரூதீன் மற்றும் அவரது மகன் நசீர் ஆகியோரை தாக்கி செல்போனை பறிக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல் நிலையத்திற்குள் இழுத்துச் சென்று அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த முகமது நசுருதீன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Police station

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணை மேற்கொண்ட நிலையில், காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் ரகுமான் (காவலர்) (06.09.2024) தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் ஆய்வாளர் சந்திரமோகன், பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார்.