தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு: அரசாணை வெளியீடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு: அரசாணை வெளியீடு

webteam

தமிழகத்தில் விபத்தில் காயமடையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அல்லது உயிரிழக்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்க வழிவகை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போது, கல்விச் சுற்றுலா செல்லும் போது, முகாம் மற்றும் பேரணிகளில் கலந்துகொள்ளும்போது, விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும்போது ஏற்படும் விபத்துகளில், பலத்த காயங்கள் அல்லது உயிர் சேதம் ஏற்படுகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் எதிர்பாராத விபத்துகளில் மரணம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தால் 50 ஆயிரம் ரூபாயும், சிறிய காயமடைந்தால் 25 ஆயிரம் ரூபாயும் என நிவாரணத் தொகை பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.விபத்தில் காயமடையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அல்லது உயிரிழக்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்க வழிவகை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.