தமிழ்நாடு

நாம் சொல்லி ரஜினிக்கு தெரிய வேண்டியதில்லை; அவர் ஒரு லெஜண்ட் - அபுபக்கர்

நாம் சொல்லி ரஜினிக்கு தெரிய வேண்டியதில்லை; அவர் ஒரு லெஜண்ட் - அபுபக்கர்

webteam

டெல்லியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். சிஏஏ போராட்டத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இஸ்லாமிய தலைவர்களை ரஜினி நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் பரவியது. அதன்படி நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் இன்று நேரில் சந்தித்தார்.

சந்திப்புக்குப் பின் பேசிய அவர், “ரஜினிகாந்த் நீண்டகால குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் அவரை சந்தித்து டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்.

நாம் சொல்லி கொடுத்து ரஜினிக்கு தெரிய வேண்டியது எதுவும் இல்லை, அவர் அனைத்தையும் படிக்கிறார். அவர் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கு சூப்பர் ஸ்டார். அவர் ஒரு லெஜண்ட்

நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், தொப்புள் கொடி உறவுகள். இந்தியா பொருளாதாரத்தில் சிறப்பான நாடாக வர வேண்டும் என்பதே நடிகர் ரஜினியின் எண்ணம். இந்த சந்திப்பின்போது அதனை நான் தெரிந்துகொண்டேன்” என தெரிவித்துள்ளார்.