தமிழ்நாடு

காவிரியில் வெள்ளம் ! நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு

webteam

காவிரியாற்றில் நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை தாண்டியுள்ள நிலையில் காவிரியில்‌ வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை தாண்டியுள்ள நிலையில் ‌ வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. எனவே கபினி அணையிலிருந்து 32 ஆயிரத்து 500 கன அடி நீரும்‌ கே.ஆர்.எஸ் அணையிலிருருந்து 80 ஆயிரத்து 700 கன அடியும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. நீர் வரத்து உயர்வால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஊரக வளர்ச்சி, காவல், தீயணைப்பு, வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.