கைது செய்யப்பட்ட வளர்மதி  PT WEP
தமிழ்நாடு

"ஒருநாள் தங்கிக்கிறேன்" தங்க இடம் கொடுத்த தோழி வீட்டில் கைவரிசை காட்டிய பெண்! உடனடியாக கிடைத்த சிறை!

புதுச்சேரியில் தங்க இடம் கொடுத்த தோழி வீட்டில் தங்க நகைகளைத் திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PT WEB

புதுச்சேரி கடற்கரையில் நகராட்சிக்குச் சொந்தமான கழிப்பறை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருபவர் ராஜேஸ்வரி(52). இவர் பணி செய்து கொண்டிருந்த போது திண்டிவனத்தைச் சேர்ந்த வளர்மதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.

வளர்மதி

இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வளர்மதி, தனது தாயார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தங்க இடம் இல்லை எனக் கூறி ராஜேஸ்வரி வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்டுள்ளார். அதற்கு ராஜேஸ்வரி தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த 28 ஆம் தேதி ராஜேஸ்வரி ஒரு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகப் பீரோவில் வைத்திருந்த தனது நகைகளை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது பீரோவவில் இருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலி, மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பாகூர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வளர்மதியைக் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், தங்க நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர் மீது கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி முத்தியால் பேட்டை பகுதியில் மூதாட்டி ஒருவர் வீட்டில் புகுந்து 12 சவரன் தங்க நகை திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.