கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் காட்டையொட்டி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. இந்நிலையில் இரவு நேரங்களில் அதிகமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு கோவை வடவள்ளி அருகே கல்வீரம்பாளையம் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்டினர்.
இதற்கிடையே பொதுமக்களை நோக்கி யானை வேகமாக ஓடிவந்த நிலையில,; வனத்துறையினர் வாகனங்களை முன்னிறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பளித்தனர்.