தமிழ்நாடு

செம்‌பரம்‌பாக்கம்‌ ஏரிக்கு ஒருவாரத்திற்குப்‌‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதி‌கரிப்பு

JustinDurai

செம்‌பரம்‌பாக்கம்‌ ஏரிக்கு ஒருவாரத்திற்குப்‌‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதிகரித்துள்ளது. 

சென்னை பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரத்தில் பெரும் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது, சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய நீர் நிலையான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக 21 அடியை தாண்டியது. அதன்பின் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மழை குறைந்ததால் ஏரிக்கு வரும் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கவுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனால் செம்‌பரம்‌பாக்கம்‌ ஏரிக்கு ஒரு வாரத்திற்குப்‌‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதிகரித்துள்ளது.

ஏரியின் மொத்த உயரம் 24 அடியில், 22 அடியை நீர்‌மட்டம் எட்ட உள்ளதால் பொதுப்பணி‌த்துறையி‌னர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.